;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (04.05.2018)

0

பால் மா விலை உயர்வு!!!

பால் மாவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் ஒரு மெட்றிக் தொன் பால் மாவின் விலை 3,250 முதல் 3,350 அமெரிக்க டொலர்களாக உள்ள போதும் இதன்விலை எதிர்வரும் காலத்தில் 3,400 முதல் 3,500 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலையை 75 ரூபாவினால் அதிகரிக்குமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அதன்படி 400 கிராம் பால் மாவின் விலை 20 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவர் மீதும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துக : ஜனாதிபதி

ஜனாதிபதி அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவரும் வேறு அரச நிறுவனமொன்றின் தலைவரும் இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு கட்டளையிட்டுள்ள ஜனாதிபதி, குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித அழுத்தங்களுமின்றி சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளர்.

ஊழல் மோசடிக்க்கு எதிரான அரசாங்கத்தின் தீர்க்கமான கொள்கையினை நடைமுறைப்படுத்தல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவம் இதனூடாக உறுதியாகின்றது. சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பினை வகிக்கும் அரச அதிகாரிகளுக்கு தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீனமான, பக்கச்சார்பற்ற பின்னணி தொடர்பாக தாம் மகிழ்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.

ஐ.தே.க. பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி ; ரணில் – மைத்திரி பேச்சு

அமைச்சரவை மாற்றம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உருவாகியுள்ள அதிருப்திக்கு தீர்வை காண்பதற்காக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் குறித்தே இந்த பேச்சுவார்த்தைகள் அமைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் பிரதியமைச்ராக அலி சாகீர் மௌலானா நியமிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தவேளை ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை மாற்றம் குறித்த தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று அடுத்தவாரம் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × four =

*