;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (04.05.2018)

0

விஷேட நீதிமன்றம் அமைப்பதற்கான சட்ட நடவடிக்கை

இலஞ்ச, ஊழல் வழக்குகளை தீர்ப்பதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.

இதற்காக பாராளுமன்ற அனுமதியை பெற்றுக் கொள்ள இருப்பதாக அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே கூறினார்.

இலஞ்ச, ஊழல் வழக்குகளை தீர்க்கும் நடவடிக்கையை மிகவும் சிறந்ததாக மாற்றும் நோக்கில் விஷேட நீதிமன்றம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சொத்து விபரங்களை வௌியிடாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராக அறவிடப்படுகின்ற அபராதத் தொகையை அதிகரிப்பதற்கான சட்டமூலத்தை வகுக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.

இதற்காகவும் பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக் கொள்ள உள்ளதாக ஆணையாளர் நெவில் குருகே மேலும் கூறினார்.

31ம் திகதிக்கு முன்னர் ஶ்ரீலங்கா கிரிக்கட் தேர்தல்

ஶ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலை மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உத்தியோத்தர்களுக்கு இடமாற்றம்

பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 17 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவையின் தேவை நிமித்தம் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு, பயங்கரவாத விசாரணைப்பிரிவு, நலன்புரி பிரிவு மற்றும் மட்டக்களப்பு, கேகாலை, மாத்தறை, கந்தளாய், அம்பாறை, வவுனியா, மாத்தளை, களணி, ஹெட்டன், அநுராதபுரம், காலி, பாணந்துறை ஆகிய பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய காலநிலை நிலவரம்

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, தென், ஊவா, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சுமார் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது சில பிரதேசங்களில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும் என்றும் இடி மின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பணிபகிஸ்கரிப்பில்

களுத்துறை நகரில் இருந்து பயணிக்கும் அனைத்து தனியார் பேருந்து ஓட்டுனர்களும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

களுத்துறை – கொழும்பு தனியார் பேருந்து ஓட்டுனர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிபகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

களுத்துறை – கொழும்பு தனியார் பேருந்து ஓட்டுனர் மீது நேற்று முன்தினம் வஸ்கடுவ பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரையும் கைது செய்யவில்லை என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிபகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*