;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (04.05.2018)

0

யானையின் உடற்பாகம் மீட்பு

உயிரிழந்த யானையின் உடற் பாகமொன்று, பொலன்னறுவை-செவனப்பிட்டிய பகுதியிலிருந்து, வெலிகந்த வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளால், இன்று மீட்கப்பட்டது.

குறித்த யானை, ஹக்க படஸ் என்ற வெடிமருந்தை உட்கொண்டே உயிரிழந்திருப்பதாக, பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

தொண்டர் ஆசிரியர்கள் கிழக்கில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 445 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்காது 1500 பேர்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து குழப்பமான சூழலை ஏற்படுத்தி உண்மையான தொண்டர் ஆசிரியர்களை புறம் தள்ளியமையை கண்டித்தே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மாதிரிக் கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு!!

திருகோணமலை கோமரங்கடவலவில் அமைக்கப்பட்ட மாதிரி கிராமத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாச, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அருண சிறிசேன உட்பட உயரதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வவுனியா நெடுங்கேணி முதியோர்கள் ஆன்மிகச்சுற்றுலா

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக முதியோர் சங்கத்தினர் இன்று காலை நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்திற்கான ஆன்மிகச்சுற்றுலாவை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட சமூகசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீனிவாசனின் தலைமையில் வீ 3 பவுண்டேசனின் லண்டன் புலம்;பெயர்ந்து வாழ் தயாக உறவுகளான திரு. நிமலராஜ் காயத்திரி தம்பதிகளின் நிதி உதவியுடன் நெடுங்கேணி பிரதேச செயலக முதியோர்கள் ஆன்மிகச்சுற்றுலாவை மேற்கொண்டனர்.

புதிய கட்டடத் திறப்பு விழாவும், கலை விழாவும்!!

ஹற்றன் எபோட்சிலி தமிழ் மகா வித்தியாலயத்தில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தின் திறப்பு விழாவும், ராகதீஸ்வர கலை நிகழ்வும் பாடசாலையின் அதிபர் தலைமையில் இன்று இடம்பெற்றது.

மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாயத்துறை, மீன்பிடி, தோட்ட உட்கட்டமைப்பு, இந்து கலாச்சார அமைச்சர் எம்.ரமேஷ்வரன் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 6 =

*