;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (05.05.2018)

0

விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் பணி இடைநீக்கம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் பணியை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகவுள்ள தெற்காசிய கணிஷ்ட தடகள போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து பங்கேற்கும் வீர, வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ஆலோசகர்களுக்கு தேவையான தங்குமிட வசதிகளை சரியான முறையில் செய்து கொடுக்கத் தவறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் செயற்பாடு காரணமாக இலங்கையை பிரதிநிதித்துவம் வீர வீராங்கனைகள் முகங்கொடுத்துள்ள அசௌகரியத்தை கருத்திற்கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் பணியை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேயிலை நிலங்களை பதிவு செய்யும் இறுதி அறிக்கை தயார்

தேயிலை நிலங்களை பதிவு செய்வது சம்பந்தமான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை கூறியுள்ளது.

அதன் தகவல்களை அடிப்படையாக கொண்டு கிராம மட்டத்தில் தேயிலை நிலங்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தேயிலை ஆணையாளர் ஜயந்த எதிரிசிங்க கூறினார்.

அந்த ஆவணங்களை பயன்படுத்தி அடுத்த ஆண்டு முதல் தேயிலை நிலங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் அடுத்த ஆண்டை ´பயிரிடும் ஆண்டு´ என பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்காக வெற்று நிலங்கள் தொடர்பான தகவல்கள் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.

தேயிலை கொழுந்து அறுவடையை மேம்படுத்தல், தேயிலை நில உரிமையாளர்களுக்கு வணிகக் கடன் பெற்றுக்கௌ்ள வசதி ஏற்படுத்தல், தேயிலை நில உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி அரச துறையால் நலத்திடங்களை வழங்குதல் இந்த ​வேலைத்திட்டத்தின் நோக்கம் என தேயிலை ஆணையாளர் ஜயந்த எதிரிசிங்க தெரிவித்தார்.

பங்­க­ளாதேஷ் கல்­வித்­தர வட்ட சம்­மேளனத்திற்கு 160 மாண­வர்கள் தெரிவு!!!

பங்­க­ளா­தேஷில் நடை­பெறும் 21 ஆவது சர்­வ­தேச மாணவர் கல்­வித்­தர வட்ட சம்­மே­ள­னத்தில் கலந்து கொள்ள அகில இலங்கை ரீதி­யாக 160 மாண­வர்கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

டாக்கா – டெபோடில் பல்­க­லையில் நேற்று ஆரம்பமாகிய மேற்­படி சம்­மே­ளனம் 6 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. அகில இலங்கை ரீதி­யாக 160 மாண­வர்கள் இதில் கலந்து கொள்­ள­வுள்­ளனர். இதில் சப்­ர­க­முவ மாகாணத்­தி­லி­ருந்து 120 மாண­வர்கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கடந்த 20 ஆவது சர்­வ­தேச மாணவர் கல்வித்தர வட்ட சம்­மே­ளனம் எம்­பி­லி­ப்பிட்­டி­யவில் நடை­பெற்­றது. இதில் சப்­ர­க­முவ மாகாண மாண­வர்கள் அதி­க­மானோர் திற­மையை வெளிக்காட்­டி­ய­மையால் அதி­க­மான மாண­வர்கள் இம் ­மா­கா­ணத்­தி­லி­ருந்து தெரிவு செய்­யப்பட்­டுள்­ள­தாக சப்­ர­க­முவ மாகாண கல்வி செய­லாளர் மஹிந்த வீர­சூ­ரிய தெரிவித்தார்.

இலங்கை, இந்­தியா, இங்­கி­லாந்து, சீனா, மலே­சியா, ஜப்பான் இபல்­கே­ரியா உட்­பட 15 நாடுகளை சேர்ந்த மாண­வர்கள் இதில் கலந்து கொள்­வ­துடன் இலங்கை மாணவர் அணிக்கு சப்­ர­க­முவ மாகாண கல்வி செயலாளர் மஹிந்த வீரசூரிய தலைமை தாங்குவதுடன் அதிபர், அதிகாரிகள் 10 பேரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

17 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம்

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு ஏற்ப 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, அத்தியாவசிய தேவை கருதி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 17 பேருக்கு உடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு ஏற்ப, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*