;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (05.05.2018)

0

வடமராட்சியில் இடிமுழக்கத்துடன் கொட்டித் தீர்த்த கடும் மழை!!

யாழ்.வடமராட்சிப் பிரதேசத்தில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் இடிமுழக்கத்துடன் ஒரு மணி நேரமாக கடும் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த மூன்று மாத காலமாக நிலவி வரும் கடும் வெப்பத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு இன்று பெய்த மழை சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளதாகவும் அதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

கடந்த ஓரிரு நாட்களாக கொழும்பு வானிலை அவதான நிலையம் வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் மின்னல் தாக்கம் அதிகமாகக் காணப்படும் எனவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன், தற்போது அக்கினி நாள் காலமாகவிருந்த போதிலும் இன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன இறக்குமதியின் போது பல்வேறு மோசடிகள்

வாகன விற்பனையின் போது பல்வேறு வகையான மோசடிகள் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளதென்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிலர் வாகனம் இறக்குமதி செய்து தருவதாக கூறி முற்பணம் பெற்றுக் கொண்டி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மிருன்சிகே கூறினார்.

அங்கீகாரம் பெற்ற வாகன இறக்குமதியாளர்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக எதிர்காலத்தில் விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கண்டி தாக்குதல் சம்பவம்: மேலும் மூவர் கைது

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில், மேலும் மூவர் இன்று (05) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பூஜாபிட்டிய, அம்பெத்தன்ன, வெ​லேகட பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தங்க மயில் கண்டெடுக்கப்பட்டது

காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் வீட்டில் இருந்து காணாமல் போன “ரணமயுர பதக்கம்” இன்று (05) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுவெல – கொள்ளுப்பிட்டி தனியார் பஸ் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில், இப்பதக்கம் காணப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

லெஸ்டர் ஜெம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியை நிகழ்வின் போது, இந்த பதக்கம் அவரது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.க வின் மே தின கூட்டம் சுகததாச விளையாட்டு மைதானத்தில்

ஐக்கிய தேசியக் கட்சியின் இம்முறை மே தின கொண்டாட்ட நிகழ்வு, கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நாளை மறுதினம் (06) மு.ப 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதில், ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிப்போர், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிப்போர், தொழிற்சங்கங்களின் தலைவர்கள், எனப் பலர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி இம் முறை மே தினப் பேரணியை முன்னெடுக்காதென, தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − three =

*