;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (06.05.2018)

0

நாட்டின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

நாடு முழுவதும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் தற்போதும் கூடுதலாக காணப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பதுளை, களுத்துறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பதுளை, களுத்துறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்ககளம் தெரிவித்துள்ளது.

8வது பாரா­ளு­மன்­ற கூட்டத்தொடர்: முப்­ப­டை­ அணி­வ­குப்­புடன் வருகை தரவுள்ள ஜனா­தி­பதி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 8 ஆவது பாரா­ளு­மன்­றத்தின் இரண்­டா­வது கூட்­டத்­தொ­டரை நாளை மறு­தினம் செவ்­வாய்க்­கி­ழமை (08-05-2018)பி.ப 2.30 மணிக்கு ஆரம்­பித்­து­ வைத்து அர­சாங்­கத்தின் கொள்கை விளக்­க­வு­ரையை நிகழ்த்தவுள்ளார் என அரசியல் தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும், ஜனா­தி­ப­தியை கௌர­விக்கும் பொருட்டு பீரங்கி வேட்­டு­கள் தீர்க்­கப்­படவுள்ளதோடு, முப்­ப­டை­யி­னரின் அணி­வ­குப்புடனேயே ஜனாதிபதி பாரா­ளு­மன்ற வீதியில் அழைத்துவரப்படுவார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்­க­வுரை மீதான விவாதம் 10 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை காலை 10.00 மணி – மாலை 6.30 மணி­வரை நடை­பெறும்.

மண்மேடு சரிந்ததில் இளைஞர் பலி

நாவலப்பிட்டிய பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (05) இரவு 8.30 மணியளவில் மண்​மேட்டுடன் மரமொன்றும் வீட்டின் மீது சரிந்து விழுந்ததில், குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடவலவ வான்கதவு திறக்கப்பட்டுள்ளது

அதிக மழைக் காரணமாக உடவலவ வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த பகுதியில் தாழ் நிலப்பிரதேசங்களில் வசிக்கும் ​பொதுமக்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறித்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + eleven =

*