;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (06.05.2018)

0

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

நாடு முழுவதும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் தற்போதும் கூடுதலாக காணப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பதுளை, களுத்துறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்ககளம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்

ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக கொழும்பு – ஹொரண பிரதான வீதியின் பிலியந்தல நகரில் இருந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கையிருப்பிலுள்ள பால்மாவின் விலையில் மாற்றம் செய்தால் கடும் தண்டனை..!

மே மாதம் 5ஆம் திகதி முதல் உற்­பத்­தி­செய்­யப்­படும் பால்­மா­விற்கே புதிய விலை பொருந்தும். எனவே கையி­ருப்­பி­லுள்ள பால்­மாவை புதிய விலைக்கு விற்­பனை செய்­வோர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதி­கார சபை அறி­வித்­துள்­ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நள்­ளி­ரவு முதல் அமு­லுக்கு வரும் வகையில் பால் மா விலையை அதி­க­ரிப்­ப­தற்கு நுகர்வோர் அதி­கார சபை அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது.

அதற்­கமைய 400 கிராம் நிறை­யு­டைய பால்­மாவின் விலை இரு­பது ரூபா­வாலும் ஒரு கிலோ கிராம் பால்­மாவின் விலை ஐம்­பது ரூபா­வாலும் அதி­க­ரிப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்!!

வலிகாமம் வடக்கு பிரதேச இளைஞர் சமேளனத்துக்கு உட்ப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வலி வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ. சேனாதிராசாவின் நிதியொதுக்கீட்டில் இருந்து 10 லட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களின் ஒரு தொகுதி இன்று வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ. சேனாதிராசா, வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன் இளைஞர் சம்மேளன அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் , இளைஞர்கள் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த வருடம் 194 நாள்களே பாடசாலை!!

அரச பாடசாலைகள் அனைத்தும் இந்த வருடம் 210 நாள்களுக்குப் பதிலாக 194 நாள்களே நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றுநிரூபம் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் வருடமொன்றுக்கு 210 நாள்கள் பாடசாலை நடத்தப்படல் வேண்டும் என்பது நியதி. ஆனால் இந்த வருடத்தில் வரும் விடுமுறை தினங்கனைக் கருத்தில் கொண்டு பாடசாலை நாள்கள் குறைக்கப்பட்டுள்ளன.

அதனால் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் 194 நாள்கள் பாடசாலைகளை நடத்துமாறு கல்வி அமைச்சு சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 9 =

*