;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (06.05.2018)

0

பாதாள உலக குழு உறுப்பினர் கண்டியில் சுட்டுக்கொலை!!

பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான திலீப என்று அழைக்கப்படும் திலீப் ரோஹன ரோட்ரிகோ என்பவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, மைலைப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரு வாரங்களுக்கு வெப்பமான காலநிலை!!

தற்போது நாட்டில் பல பிரதேசங்களில் நிலவும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை இன்னும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலநிலை எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் குறைவடையும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்- மே தினக் கூட்டத்தில் மைத்திரி!!

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாவடி வேம்புக் கிராமத்தில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றலுடன் நாளை மேதினக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் பங்குபற்றலுடன் இடம்பெறும் கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரமுகர்களை அழைத்து வருவதற்கு சுமார் ஆயிரத்து 500 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் நிழற்குடை திறப்பு!!

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் இளவாலை பிரேதச மருத்துவமனைக்கு வருகைதரும் நோயாளர்களின் நலன்கருதி பயணிகள் நிழற்குடை நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் வலிவடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் கலந்து கொண்டார்.

கபீர் ஹாசிம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் உடல்நிலை தேறி வருவதாகவும், பிரதமரும், கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, வைத்தியசாலைக்குச் சென்று அவரை பார்வையிட்டதாகவும் ஐ.தே.க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தத் தகவலை அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின நிகழ்வில் உறுதிப்படுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*