;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (07.05.2018)

0

சு.கட்­சி­யின் 10 பேர் பக்­கம் மாறத் திட்­டம்!!

சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மேலும் பத்து உறுப்­பி­னர்­கள் எதிர்க்­கட்­சி­யில் இணைந்­து­கொள்ளத் திட்­ட­மிட்­டுள்­ள­னர் என்று தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

நாடா­ளு­மன்­றின் இரண்­டாம் அமர்­வு­கள் ஆரம்­ப­மா­ன­தன் பின்­னர், அர­சின் கொள்­கைப் பிர­க­ட­னம் தொடர்­பில் எதிர்­வ­ரும் 10ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் விவா­தம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

இந்த விவா­தம் நடத்­தப்­ப­டும் தினத்­தில் ஆளும் கட்­சி­யில் அங்­கம் வகிக்­கும் பத்து சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் எதிர்க்­கட்­சி­யில் இணைந்து கொள்­வார்­கள் என அர­சி­யல் வட்­டா­ரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்த 16 சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­க­ளும் நாடா­ளு­மன்ற அமர்­வு­க­ளின் ஆரம்­பத்­தில் எதிர்க்­கட்­சி­யில் அமர்ந்­து­கொள்­ள­வுள்­ள­னர்.

இதே­வேளை, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மறு­சீ­ர­மைப்­புத் தொடர்­பில் அதி­ருப்­தி­கொண்­டுள்ள பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் கூட்டு எதிர்க்­கட்­சி­யு­டன் இணைந்து புதிய அரசை அமைப்­பது குறித்து கவ­னஞ்­செ­லுத்தி வரு­கின்­ற­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

20ஆம் திகதி வரை­யில் சுட்­டெ­ரிக்­கும் வெயில்!!

தற்­போது வடக்கு உட்­பட நாடு முழு­வ­தும் நில­வும் அதிக வெப்­பத்­து­ட­னான கால­நிலை எதிர்­வ­ரும் 20ஆம் திகதி வரை நீடிக்­கும் என்று வளி­மண்­ட­லவியல் திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது. தற்­போது வெப்­ப­நிலை 35 பாகை செல்­சி­யஸ் வரை அதி­க­ரித்­துள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சுட்­டெ­ரிக்­கும் வெயி­லால் மக்­கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர். கால்­ந­டை­க­ளும் அவ­தி­யு­று­கின்­றன. அதி­க­மான வெப்­ப­நி­லை­யைத் தாக்­குப்­பி­டிக்க நாளொன்­றுக்கு 2 லீற்­றர் நீர் அருந்த வேண்­டு­வது அவ­சி­யம் என்­றும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

சிறு பிள்­ளை­க­ளுக்கு ஒரு நாளைக்கு ஒன்­றரை லீற்­றர் நீர் வழங்­கு­வ­தும் பாது­காப்­பா­னது. இந்த நாள்­க­ளில் அடிக்­கடி குளிப்­ப­தும் நல்­லது என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அதிக வெப்­ப­மான கால­நி­லை­யின் போது பய­ணங்­க­ளில் ஈடு­பட வேண்­டாம். கூடி­ய­ளவு குடை­களை பயன்­ப­டுத்த வேண்­டும். தொப்பி மற்­றும் வெள்ளை நிறத்­தி­லான ஆடை­களை பயன்­ப­டுத்த வேண்­டும். இந்த வெப்­பம் உட­லுக்கு ஏற்­ற­தல்ல என்­ப­த­னால் சிந்­தித்து செயற்­பட வேண்­டும் என்­றும் துறை­சார்ந்­த­வர்­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

கூட்டு எதி­ரணி மீது அர­சுக்கு அச்­ச­மாம் – மகிந்த!!

கூட்டு எதிர்க்­கட்­சி­யின் மீது ஏற்­பட்­டுள்ள அச்­சத்­தின் கார­ண­மா­கவே காலி­மு­கத்­தி­ட­லில் மே தினக் கூட்­டத்தை நடத்­து­வ­தற்­கான அனு­மதி மறுக்­கப்­பட்­டது. இவ்வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.

மகிந்த அணி­யின் மே தினக் கூட்­டத்தை காலி முகத்­தி­ட­லில் நடத்­து­வ­தற்­குத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. எனி­னும், அதற்­கான அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்­பா­கக் கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் தெரி­வித்­தா­வது,

கடந்த வரு­டம் இடம்­பெற்ற மே தினக் கூட்­டத்­தில் அர­சைக் காட்­டி­லும் தமது கட்­சி­யின் கூட்­டத்­திற்கே மக்­கள் திரண்டு வந்­தி­ருந்­த­னர். அதை எண்­ணியே இந்­த­முறை காலி­மு­கத்­தி­டலை வழங்­கு­வ­தற்கு அரசு மறுப்­புத் தெரி­வித்­தது.

இன்று காலி­யில் நடை­பெ­ற­வுள்ள தமது மே தினக் கூட்­ட­மா­னது, மக்­கள் தற்­போது முகங்­கொ­டுத்­துள்ள வரி தொடர்­பி­லான பிரச்­சி­னைக்­குக் குரல் கொடுக்­கும் கூட்­ட­மா­கவே அமை­யும். இதன்­போது அர­சுக்­குப் பல்­வேறு அறி­விப்­பு­க­ளை­யும் விடுக்­க­வுள்­ளோம்.-என்­றார்.

பேது­ரு­வா­ன­வர் சிலை உடைப்பு!!

யாழ்ப்­பா­ணம் மண்­டை­தீவு சந்­தி­யில் அமைந் துள்ள புனித பேது­ரு­வா­ன­வ­ரின் சிலை உடைக்­கப்­பட்­டுள்­ளது. சிலையை உடைத்­த­வர் என்று கூறப்­ப­டு­ப­வர் மக்­க­ளால் பிடிக்­கப்­பட்டு பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று மதி­யம் நடந்­துள்­ளது.
சிலையை கூண்­டில் இருந்து எடுத்து கீழே போட்டு உடைப்­பதை அவ­தா­னித்த ஊர் மக்­கள் அவ­ரைக் பிடித்து மண்டை தீவு பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்­பும் சிலை அமைத்­துள்ள வெளிப்­புற கண்­ணாடி தொகுதி உடைக்­கப்­பட்­டது. பின்­னர் சீர­மைத்து கொடுக்­கப்­பட்­டது.
மதங்­க­ளுக்கு இடையே நல்­லி­ணக்­க­கத்தை குழப்­பும் வகை­யில் செயற்­ப­டு­வோர் மீது உரி­ய­வர்­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று மக்­கள் கேட்டு கொண்­டுள்­ள­னர் .

1500 பேரூந்துகள் மேதினக் கூட்டங்களுக்கு வாடகைக்கு முன்பதிவு!

மேதினக் கூட்டங்களுக்கு பொதுமக்களை ஏற்றிச் செல்வதற்காக பல்வேறு கட்சிகளும் 1500 பேருந்துகளை முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

வெசாக் கொண்டாட்டங்கள் காரணமாக இம்முறை மேதினக் கூட்டங்கள் 7ம் திகதிக்கு பிற்போடப்பட்டிருந்த நிலையில் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மேதினக் கூட்டங்களை கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன.

இதற்காக பொதுமக்களை ஏற்றிச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆயிரத்து ஐநூறு பேருந்துகள் தற்போதைக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கான கட்டணங்கள் முழுமையாகச் செலுத்தப்பட்ட பின்னரே பேருந்துகளை கட்சிகளின் தேவைக்காக கையளிக்குமாறு போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொதுமுகாமையாளர் பீ.எச்.ஆர்.சந்திரசிறி கண்டிப்பான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*