;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (07.05.2018)

0

தனியார் பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டை மீண்டும் அறிமுகம்

அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் முற்கொடுப்பனவு அட்டையை மீண்டும் அறிமுகம் செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த அட்டையை வழங்குவதற்கு இப்போதைக்கு இரண்டு அரச வங்கிகள் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது​.

கடந்த காலங்களில் கொழும்பின் பிரதான பாதைகள் பலவற்றில் இந்த அட்டை முறை பயன்படுத்தப்பட்ட வந்து போதும் சில பிரச்சினைகள் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் இன்று (07) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் பதுளை, களுத்துறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்ககளம் தெரிவித்துள்ளது.

புகையிரத பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

நாளை நள்ளிரவு முதல் அனைத்து புகையிரத தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக புகையிரத காவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*