;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (08.05.2018)

0

இரு பெண்கள் 1.1 கிலோ தங்கத்துடன் விமான நிலையத்தில் கைது

10 மில்லியன் ரூபா பெறுமாதியான 1.1 கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு பெண்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஐ.தே.கவிற்குள் சரத் பொன்சேகாவிற்கு எதிர்ப்பு!

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 6ம் திகதி நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் சரத் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ஜனாதிபதியை விமர்சனம் செய்தமை குறித்து கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலர் பிரதமரிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சரத் பொன்சேகாவின் நடவடிக்கை பிழையானது என்பதனை பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோருமாறு சரத் பொன்சேகாவிற்கு பணிப்புரை விடுக்கப்பட உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சரத் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் ஐக்கிய தேசியக்கட்சி எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்பதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள அரசு

பொருளாதார ரீதியில் எவ்வித வெற்றியையும் அடையாத மற்றும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள அரசாக இந்த அரசாங்கம் ஆட்சியாளர்களினால் ஆக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்ததாகவும், ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியமைத்ததாகவும், இவ்வாறு 70 வருடங்கள் ஆட்சி செய்தும் நாட்டில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தெற்காசிய வலயத்திலேயே அதிக வறுமையில் வாழும் மக்கள் உள்ள அரசாக இந்த அரசாங்கம் ஆகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் விவசாயிகள் வறட்சியால் பாதிப்பு!

வறட்சியான காலநிலை தொடர்வதால் யாழில் வெங்காயம் உட்பட்ட 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை பரப்பு முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்த நிலையில், இளவாழை, மாதகல் மற்றும் உறும்பிராய் பகுதிகளில் வெங்காய பயிர்ச் செய்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தமது பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தம்மால் பெறப்பட்ட வங்கிக்கடன்களை செலுத்துவதற்கு நிவாரணங்கள் பெற்றுத்தருமாறு அந்த பகுதி விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும், விவசாயிகள் விளை நிலங்களில், கடந்த வருடம் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபட்டதாகவும், உரிய காலத்தில் விதை உருளைக்கிழங்குகள் கிடைக்காத காரணத்தினால் இந்த வருடம் மாற்றுபயிர்ச் செய்கையாக வெங்காயத்தை பயிரிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*