;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (08.05.2018)

0

எச்சரிக்கை! நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வேண்டாம்

இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளையில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் அதிகரித்துள்ளதுடன் ஏனைய நாட்களை விடவும் அதிக நீர் வெளியேறி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

அவ்வாறு யாரும் செல்ல வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். குளிக்க சென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதிக்கு செல்வதனை தற்போது தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.

இன்று முதல் 16 உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில்

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்றைய கூட்டத் தொடரில் கடந்த காலத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 அமைச்சர்களும் இன்று முதல் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் உட்பட 16 பேரும் இன்று முதல் எதிரணியாக கடமையாற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நேற்று (07) இரவு தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”மஹிந்தவினாலேயே மலைய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும்”

நல்லாட்சி அரசாங்கத்தினால் மலைய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினேலேயே அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என மலைய மக்கள் முன்னணி உறுப்பினர் டாக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் தொழிலாளர் தினக்கூட்டம் நேற்று காலி சமனல மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

122 வருடங்ளாக தொழிலாளர் தினம் மே மாதம் முதலாம் திகதியே கொண்டடப்பட்டு வந்தது. ஆனால் இவ்வருடம் அது மாற்றப்பட்டுள்ளது. அரசாங்கம் சகல விடயங்களிலும் மாற்றம் ஏற்படுத்த முனைகிறது. ஆனால் அதன் மூலம் பாதகமே ஏற்படுகிறது. இவ்வாறான மாற்றங்கள் நாட்டை எங்கு கொண்டு சென்று விடுமோ தெரியாது.

மேலும் இருநூறு வருடகால வரலாற்றைக்கொண்ட மலைய மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. காலம் காலமாக அம்மக்கள் இழிபேச்சுகளுக்கு உட்பட்டு வருகின்றனர். ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அம்மக்கைள ஏமாற்றியே வருகிறது.

இனியும் அந்நிலையைத் தொடர விடமுடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே அம்மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்க முடியும். ஆகவே மலைய மக்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரு பணிப்புறக்கணிப்புக்கள்

இன்றைய தினம் (08) நள்ளிரவிலிருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடன்கொட தெரிவித்துள்ளார்.

சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பது ​குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய முறையில் தீர்வொன்றை எடுக்காததை முன்னிட்டே, இந்த பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் மின் பொறியியலாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*