;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (08.05.2018)

0

இன்று முதல் 16 உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில்

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்றைய கூட்டத் தொடரில் கடந்த காலத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 அமைச்சர்களும் இன்று முதல் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் உட்பட 16 பேரும் இன்று முதல் எதிரணியாக கடமையாற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நேற்று (07) இரவு தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நியோமல் மற்றும் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமரை சந்தித்த செர்பியாவின் பிரதி பிரதமர்

செர்பியா நாட்டின் முதலாவது பிரதி பிரதமரும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான இவிக்கா டெசிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு துறைகளில் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது செர்பியா வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், அணிசேரா நாடு என்ற ரீதியில் இலங்கையுடன் முன்னாள் யுகோசிலாவியாவின் தலைவர் மார்சல் ரிட்டோவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து இதன்போது குறிப்பிட்டார்.

முன்னாள் யுகோசிலாவிய நாடான செர்பியா இந்த உறவுகளை இலங்கையுடன் தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இருநாடுகளுக்கிடையில் உள்ள உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது கருத்துக்களை முன்வைத்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வெளிநாட்டமைச்சர் அரசாங்கத்தின் உயரதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிகாயங்களுடன் சடலம் மீட்பு

மாவனெல்ல பிரதேசத்திலிருந்து எரிகாயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (07) குறித்த பகுதியிலுள்ள பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பல மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யும்

நாட்டில் பல மாகாணங்களில் இன்றைய தினம் (08) இரவு மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 5 =

*