;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (08.05.2018)

0

நியோமல் மற்றும் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின்னல் தாக்கி மீனவா் உயிரிழப்பு

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடாக்குடா கடலில் படகில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவா் மீது மின்னல் தாக்கியதில் மீனவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றுமொரு மீனவர் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் மூதூர் தள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் மூதூர் பால நகரைச் சேர்ந்த 45 வயதுடைய எம்.பரீஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உலக தலசீமியா தினம் இன்று

பாடசாலை மாணவர்கள் மத்தியில் தலசீமியா நோய் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்கான தேசிய வேலைத்திட்டம் இன்று (08) ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலக தலசீமியா தினம் இன்றாகும். இதற்கமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டம் கண்டியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அலுவலகத்தின் தொற்றாநோய் பிரிவுப்பணிப்பாளர் விசேட வைத்தியர் பலியவதன தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

மெதகம, பிபில பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதுல் நேற்று (07) இரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலத்த காயங்களுக்குள்ளான மூவரையும் மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் மது அருந்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாதாரண தரம் தோற்றியோர் உயர்தரத்தில் கல்வி கற்கலாம்

இந்தமுறை சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் அனைவரும் உயர்தரம் கற்கமுடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு பரீட்சை எழுதி முடிவுகள் கிடைத்த மாணவர்கள் அனைவரும் உயர்தரம் கல்வி கற்க முடியும். உயர்தரம் மட்டுமல்லாது பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறமுடியும்.”

புதிய அமைச்சரவை கூட்டம் நாளை

பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் இன்று (08) நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம் நாளை (09) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிறகு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள முதல் தடவை இதுவாகுமென என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 2 =

*