;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5..!! (08.05.2018)

0

மீண்டும் மண்சரிவு அபாயம்?

மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையினால் மண்சரிவு அபாயம் இருப்பதனால் அவதானமாக இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 48 மணிநேரத்தில் பல்வேறு மண்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

ஹல்துமுல்ல வீதியின் பல பகுதிகளிலும் ஹப்புத்தளை பேரகல, பதுள்ளை எல்ல – வெல்லவாய வீதிகளிலும் மண்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஹப்புத்தளை வீதியில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன போக்குவரத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்

இப்பலோகம பகுதியில் தொல்பொருள் இடங்களை அழித்த குற்றச்சாட்டு தொடர்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இருவரை வேலைநிறுத்தம் செய்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத் திருத்தச் சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு

நீதிமன்றத் திருத்தச் சட்டமூலம், நாளை (09) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதென, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று (08) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மோசடிகளுடன் தொடர்புடைய வழக்குகளைத் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், நீதிபதிகள் மூவரடங்கிய விசேட நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளதெனக் குறிப்பிட்டார்.

விளக்கமறியல் கைதிகளுக்கு விசேட சிறைக்கூடம்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் விசேட விளக்கமறியல் கைதிகளுக்காக, தனித்துவமான சிறைக்கூடமொன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக​, நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் தி​ணைக்களத்தில், இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், விசேட விளக்கமறியல் கைதிகளின் பாதுகாப்புக் கருதி, இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க எண்ணியுள்ளதாகவும், வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, அவர்களைப் பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பென்றும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + seventeen =

*