;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (09.05.2018)

0

வழி­ந­டத்­தல் குழு கூட­வில்லை -ஜூன் மாதமே கூடும் அறி­குறி!!

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக நிய­ மிக்­கப்­பட்ட அர­சி­யல் நிர்­ணய சபை­யின் வழி­ந­டத்­தல் குழு­வின் கூட்­டம் நேற்று நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­ட­போ­தும், கூட்டம் நடை­பெ­ற­வில்லை.

மே மாதத்­துக்­கு­ரிய இரண்­டா­வது நாடா­ளு­மன்­றக் கூட்­டத் தொட­ரில் அல்­லது ஜூன் மாத ஆரம்­பத்­தில்­தான் அதற்­கான சாத்­தி­யம் உள்­ளது என அறி­ய­மு­டி­கின்­றது.

வழி­ந­டத்­தல் குழு தனது இடைக்­கால அறிக்­கையை முன்­வைத்­துள்ள போதும் கடந்த ஐந்து மாதங்­க­ளுக்கு மேலாக அதன் செயற்­பா­டு­கள் முடங்­கி­யுள்­ளன.

புதிய அர­ச­மைப்பு அவ­சி­ய­மில்லை என்று மகா­நா­யக்க தேரர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, மகிந்த அணி­யான கூட்டு எதி­ரணி ஆகி­ய­ன­வும் அந்த நிலைப்­பாட்­டில்­தான் உள்­ளன.

முழு­மை­யா­ன­தொரு அர­ச­மைப்பு மறு­சீ­ர­மைப்பு அவ­சி­யம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் முற்­போக்­குக் கூட்­டணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் உட்­பட சிறு­பான்­மை­யி­னக் கட்­சி­கள் வலி­யு­றுத்­து­கின்­றன. இந்த நிலை­மை­யில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லும் நடை­பெற்­றது. இவ்­வா­றான செயற்­பா­டு­கள் கார­ண­மா­கவே வழி­ந­டத்­தல் குழு­வின் கூட்­டம் நிறுத்­தப்­பட்­டது.

எட்­டா­வது நாடா­ளு­மன்­றத்­தின் இரண்­டா­வது கூட்­டத் தொடர் ஆரம்­ப­மான கையோடு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான 21 பேர­டங்­கிய வழி­ந­டத்­தல் குழு­வின் கூட்­டம் நேற்று நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனி­னும் அது நடை­பெ­ற­வில்லை.

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வௌியேற்றம்

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வௌியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அபாயம் காரணமாக நேற்றைய தினம் 8 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்துள்ளார்.

அதிக மழையுடனான வானிலை காரணமாக ஹப்புத்தளை, தம்பேதென்ன மற்றும் மவுசாகலை பகுதிகளைச் சேர்ந்த 64 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதிக மழை காரணமாக திறக்கப்பட்ட உடவளவ நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபையின் உதவி பணிப்பாளர் பூஜித குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை மழையுடனான வானிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பிலான ஆய்விற்கிணங்க மண்சரிவு அபாயம் நிலவும் 10 மாவட்டங்களுக்காக விசேட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

குறித்த குழுவில் 35 பேர் அடங்குவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் எச்.எல்.எம். இந்திரதிலக தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் உள்ளடங்கும் வகையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

6 கிலோ கேர­ளக் கஞ்சா புதுக்­கு­டி­யி­ருப்­பில் மீட்பு!!

இரு முச்­சக்­கர வண்­டி­க­ளில் கடத்­திச் செல்­லப்­பட்ட 6 கிலோ கேர­ளக் கஞ்சா கைப்பற்­றப்­பட்­டுள்­ளது என்று புதுக்­கு­டி­யி­ருப்­புப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் இரு சந்­தேக நபர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

புதுக்­கு­டி­யி­ருப்பு, பரந்­தன் வீதி­யி­லேயே கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது. முச்­சக்­கர வண்­டி­க­ளின் சார­தி­களே கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். கஞ்சா கிளி­நொச்­சிக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்­க­லாம் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சந்­தே­க­ந­பர்­களை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்­றும் பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

ஐரோப்பிய ஒன்றியம் நல்லிணக்க முயற்சிகளிற்கு தொடர்ந்தும் ஆதரவு

இலங்கையின் நல்லிணக்க மற்றும் சீர்த்திருத்த முயற்சிகளிற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங் லாய் மார்கியூ இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரங்களில் ஏற்படும் முன்னேற்றம் இலங்கையில் நிரந்தரசமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் வழிகோலும் என ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக நம்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தினத்தை குறிக்குமுகமாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்கியதன் காரணமாகவும் மீன்பிடித்தடையை நீக்கியதன் காரணமாகவும் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

நீண்ட கால மின் பிறப்பாக்க திட்டம் தொடர்பான தமது கோரிக்கைகளுக்கு சிறந்த தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது.

அத்தியாவசிய சேவைகள் இடையூறின்றி முன்னெடுக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் மாத்திரம் சேவையாற்றுதல் உரிய பாதுகாப்பு நடவடிக்கை இன்றி சேவையாற்றுவதிலிருந்து விலகுதல் ,திடீர் அழைப்புகளுக்கு ஏற்ப சேவைக்கு வருகை தராமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இந்த பணிப்பகிஷ்கரிப்பினுள் உள்ளடங்குகின்றன.

இதேவேளை, மின்சார சபையின் நீண்ட கால மின் பிறப்பாக்க திட்டம் தொடர்பாக இன்று அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*