;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (09.05.2018)

0

வெல்லம்பிட்டியில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டியவில், லங்சியாவத்தைக்கு திரும்பும் சந்திக்கு அருகில் ஒரு தொகை ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 604 கிராமும் 920 மில்லினிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருளும் 53,780 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐ.கே. மஹானாம மற்றும் பி. திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே. மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இன்று நண்பகல் முதல் புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இன்று (09) நண்பகல் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக புகையிரத ஊழியர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும் போராட்டத்தை இன்று வரை பிற்போடுவதற்கு அவர்கள் நேற்று தீர்மானித்தனர்.

அதன்படி இன்று நண்பகல் முதல் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல்

சய்டம் பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்காத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து களனி பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தேசிய கணக்காய்வு சட்டமூலம் அரசியலமைப்புக்கு எதிரானதல்ல

தேசிய கணக்காய்வு சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது என்று சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*