;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (10.05.2018)

0

தேயிலை மற்றும் இறப்பர் செய்கைக்கு கிலைபோசேட் தடை நீக்கம்

தேயிலை மற்றும் இறப்பர் பயிர் செய்கைகளுக்கு மாத்திரம் 36 மாத காலத்துக்கு கிலைபோசேட் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மாினத்துள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட தன்மையின் அடிப்படையில், பெருந்தோட்ட துறைகளுக்கு மாத்திரம் கிலைபோசேட் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக நிபுணத்துவம் கொண்டோர் அடங்கிய குழுவொன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது.

அக்குழுவின் சிபார்சுகளுக்கு அமைவாக கிலய்போசேட் பயன்பாட்டின் தாக்கத்தை மேற்பார்வை செய்வதற்காக வேண்டி இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் உயர் தொ​​ழினுட்பவியல் வாகனத் தொழிற்சாலை

உயர் தொ​​ழினுட்பவியல் மின் வாகன ​தொழிற்சாலையொன்றை இலங்கையில் அமைக்க, ஜப்பான் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக, கைத்தொழில் மற்றும் வாணிபத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

லோட்டஸ் வீதிக்கு பூட்டு – சய்டம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

சய்டம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இணைந்து நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே இந்த வீதி தற்காலிகமாக மூடப்ப்ட்டுள்ளது.

சில பிரதேசங்களில் நீர் வியோகத் தடை

கொலன்னாவ , மீத்தொட்டமுல்லை, சேதுவத்தை ஆகிய பிரதேசங்களில் இன்றைய தினம் (10) நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய திருத்தல் வேலைகள் காரணமாக, இந்நீர் வியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மேலும் இன்று பிற்பகல் 2 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் இந்நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய டெங்கு தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில், இன்றைய தினமும் (10) நாளைய தினமும் (11) விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்பொழுது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு பெருக்கம் அதிகரித்துள்ளதனால் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்விசேட வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கு முப்படையினர், பொலிஸ் ​மற்றும் சுகாதார அதிகாரிகள் 700 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 4 =

*