;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (10.05.2018)

0

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் இம்மாதம் 24ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

டப்ளியூ.எம். மெண்டிஸ் என்ட் கம்பனியின் நிதிக் கொடுக்கல் வாங்கல் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு

டப்ளியூ.எம். மெண்டிஸ் என்ட் கம்பனி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட நிதிக் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் தபால் சேவை ஊழியர்கள்

தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

12 வருட காலமாக இருக்கின்ற தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விஷேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதாக அதிகாரிகள் உறுதிமொழி வழங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் எம்.கே. காரியவசம் கூறினார்.

எவ்வாறாயினும் இதுவரை அந்த உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாக அடுத்த இரண்டு வாரத்திற்குள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக எம்.கே. காரியவசம் கூறினார்.

இதேவேளை தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்காமையின் காரணமாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள உரிய நேரத்திற்கு மாத்திரம் வேலை செய்யும் போராட்டம் தொடர்ந்து இடம்பெறுகின்றது.

சிறுவர்களின் சேமிப்புக் கணக்குக்கு விதிக்கப்பட்ட வரி நீக்கம்

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறினார்.

பதிப்புரிமைக்காக மாதம் 50,000 ரூபா வரை வரி விலக்கு

புத்தக விநியோக உரிமையாளர்களிடம் இருந்து மாதாந்தம் 50,000 ரூபா அல்லது ஆண்டுக்கு 500,000 இலட்சம் ரூபாவுக்கு குறைந்த வருமானம் பெறும் புத்தக பதிப்புரிமையாளர்களுக்கு வரி விலக்களிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனைக் கூறினார்.

புதிய தலைவரின் நியமனத்தை இரத்துச் செய்த ஜனாதிபதி

அரச மரக்கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அநுருத்த பொல்கம்பொலவின் நியமனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2 கோடி ரூபா பணத்தை முற்பணமாக பெறும் போது கைது செய்யப்பட்ட அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அநுருத்த பொல்கம்பொல புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − eleven =

*