;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (11.05.2018)

0

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை விபரம் இதோ!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி ஒக்டைன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபாவாகவும், ஈரோ 3 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 143 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 151 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

அதேநேரம் ஒட்டோ டீசல் 111 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 119 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் 2020 ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனரத்ன மற்றும் கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகிய இருவரும் இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற இரண்டு ஊடகவியலாளர் சந்திப்புக்களின் போதே அவர்கள் இருவரும் இவ்வாறு இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மே தின நிகழ்வுகளின் பின்னர் இது தொடர்பில் தன்னுடன் கலந்துரையாடியதாகவும் இதன்போது பிரதமர் பொது வேட்பாளர் ஒருவர் தொடர்பில் தெரிவித்ததாகவும் அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

ஆனால் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவரையே தேர்தலில் போட்டியிட வைப்பதாக தெரிவித்துள்ளார்.

மலையக ரயில் சேவையில் பாதிப்பு

மலையக ரயில் மார்க்கத்தில் ரம்புக்கன – பதுளை இடையிலான ரயில் சேவையில் நேற்று இரவு முதல் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி சென்ற தபால் புகையிரதமும், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் புகையிரதமும் நாவலப்பிட்டிய புகையிரத நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் காட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் சிறுவர்கள் பெரியோர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்ட பயணிகள் தங்களின் வீடுகளுக்கு செல்ல முடியாமல் இரவு நேரத்தில் புகையிரதத்தினுள்ளே காத்திருந்ததாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உடனடியாக பயணிகளின் பாதுகாப்பு கருதி நாவலப்பிட்டி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்தோடு பயணிகள் புகையிரத்திலேயே நித்திரை கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை பயணிகள் நலன் கருதி இன்று காலை முதல் அரச பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

புகையிரத ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மீனவ, சமுர்த்தி குடும்­பங்­க­ளுக்கு மண்­ணெண்ணெய் 44 ரூபா­வுக்கு!!

மண்­ணெண்ணெய் விலை அதி­க­ரித்­தா­லும் சமுர்த்­திக் குடும்­பங்­க­ளுக்­கும், மீன­வர்­க­ளுக்­கும் பழைய விலை­யான 44 ரூபா­வுக்கே மண்­ணெண் ணெய் வழங்­கப்­ப­டும் என்று அமைச்­சர் ராஜித சேனா ­ரத்ன தெரி­வித்­தார்.

மண்­ணெண்ணெய்யின் விலை 57 ரூபா­வால் அதி­க­ரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

49 கிலோ கஞ்சா கட­லில் மீட்பு

காங்­கே­சன்­து­றைக் கட­லில் மிதந்­து­ வந்த 49 கிலோ­கி­ராம் கஞ்சாவை மீட்­ட­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்த­னர்.

14 பொதி­க­ளாக அவை கரை­யா­துங்­கின. எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. காங்­கே­சன்­து­றைக் கடற்­ப­டை­யி­னர் அவற்றை மீட்டு காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 3 =

*