;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (11.05.2018)

0

வீடொன்றில் ஒன்றரை கிலோவுக்கும் அதிகமான ஹெரோய்ன்

ஹொரணை, மொரகஹஹேன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து ஒன்றரை கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோய்ன் போதைப் பொருள் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி அவரின் வீட்டிலிருந்து சுமார் 01 கிலோ 767 கிராமும் 720 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 04ம் திகதி ஹொரணை பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்த பின்னர் 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகநபரின் வீட்டில் நடத்திய சோதனையின் போது இரும்பு பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோய்ன் போதைப் பொருளும் 493.63 கிராம் நிறையுடைய தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவியேற்பு

தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இதன்போது உடனிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ஊவா மாகாண ஆளுநராக ஆரிய பண்டார ரெகவ நியமனம்

ஊவா மாகாணத்திற்கான ஆளுநராக ஆரிய பண்டார ரெகவ சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இதன்போது உடனிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

அனுமதிப்பத்திரமின்றி யானை குட்டி ஒன்றை தம் வசம் வைத்திருந்ததாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கும், உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கின் , சாட்சியாளர்களை நீதிமன்றுக்கு அழைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் சம்பத் விஜேரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி, சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பஸ் கட்டணம் அதிகரிக்கும்?

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில், இன்றைய தினம் (11) இடம்பெறவுள்ள கலந்தரையாடலை அடுத்து, பஸ் கட்டணத்தை அதிகரிப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படுமென, கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + twenty =

*