;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (11.05.2018)

0

இலஞ்சம் பெற்ற வருமான வரி அதிகாரிக்கு 14 ஆண்டு சிறை

இலஞ்சம் பெற்ற முன்னாள் உள்நாட்டு இறைவரி அதிகாரி ஒருவருக்கு 14 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டில் 15,000 ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றத்திற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 9000 ரூபா அபராதமும், 15,000 ரூபா தண்டப் பணமும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அநுராதபுரம் கிளையில் வரி மதிப்பீட்டாளராக பணியாற்றும் டீ.எம். ஜனக பண்டார என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வரி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் உதவி வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 15,000 ருபா இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்காக அவர் குற்றவாளியாக இனம்காணப்பட்டுள்ளார்.

தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கில் சாட்சிகளை அழைக்க உத்தரவு

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சிகளை அழைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னர் முறைப்பாட்டு தரப்பு சாட்சி விசாரணை நடவடிக்கைகள் சட்ட மா அதிபரால் நிறைவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பிரதிவாதிகளின் சாட்சிகளை அழைக்காமல் வழக்கிலிருந்து தேரரரை விடுதலை செய்ய முடியும் என்று பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

எனினும் பிரதிவாதிகளின் சாட்சிகளை அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதிவாதிகளின் சாட்சி பட்டியலை வழங்குவதற்கு கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி கேட்டுக் கொண்டதற்கிணங்க, எதிர்வரும் ஜூலை மாதம் 17ம் திகதி அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கொட்டாஞ்சேனையில் வீதியொன்றுக்கு தற்காலிகமாக பூட்டு

கொட்டாஞ்சேனை, அளுத் மாவத்தையில் ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பாகாவத்தை சந்தி வரையான இராமநாதன் மாவத்தை இன்று (11) இரவு 09.00 மணி முதல் எதிர்வரும் 14ம் திகதி காலை 05.00 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வீதியின் ஒரு பகுதியில் புதிதாக குடிநீர் குழாய் பொறுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் இவ்வாறு வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அந்தக் காலத்தில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

உதயங்க வீரதுங்க சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு விடுக்கப்பட்ட உத்தரவை தளரத்திக் கொள்ளுமாறு கோரி அடிப்படை உரிமை மனு ஒன்று உதயங்க வீரதுங்கவின் சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*