;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (11.05.2018)

0

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக சாந்த பண்டார

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அதன் தலைவராக நியமிக்கப்பட்ட அநுருத்த பொல்கம்பொலவின் நியமனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்ய ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டார்.

அதன்படி ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் 17ம் திகதி அரச வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

பல்வேறு காரணங்களை முன்வைத்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 17ம் திகதி பரந்தளவிலான ஒருநாள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அந்த சங்கம் இதனைத் தெரிவித்தது.

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்தும், எட்கா உடன்படிக்கையை தன்னிச்சையான முறையில் தொடர்வதை எதிர்த்தும் அவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இது சம்பந்தமாக நேற்று கூடிய அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த சங்கம் தெரிவித்தது.

சய்டம் மாணவர்களை கொத்தலாவெல கல்லூரியில் உட்சேர்ப்பதற்கு அமைச்சரவை பத்திரம்

சய்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பது சம்பந்தமான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மாணவர்களின் தகுதியை மதிப்பீடு செய்து அவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர் கல்வியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ ஆகியோர் இணைந்து இந்தப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர்.

சமூர்த்தி வங்கியை ஒழுங்குறுத்தவதற்காக கண்காணிப்பு குழு

சமூர்த்தி வங்கியை ஒழுங்குறுத்தவதற்காக இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (11) காலை நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று (11) பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இதனை குறிப்பிட்டார்.

திவிநெகும சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூர்த்தி வங்கி முகாமைத்துவக் குழுவினால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த குழுவில் இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சின் பிரதிநிதிகள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.

இதன் நிர்வாகத்தை மேலும் பலப்படுத்தி பொதுமக்களுக்கு பரந்த சேவையை வழங்கும் நோக்கத்தில், சமூர்த்தி வங்கிக்காக புதிய கண்காணிப்பு குழு அமைப்பதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

தேர்தல் மே 31 நடைபெறும்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல், விளையாட்டுத்துறை அமைச்சர், பைசர் முஸ்தப்பாவின் அறிவித்தலுக்கமைய, மே மாதம் 31 ஆம் திகதி நடத்தப்படும் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*