;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (12.05.2018)

0

அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் பலனற்றது

நல்லிணக்கத்தை் ஏற்படுத்துவதற்காக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கின்ற சில செயற்பாடுகள் பலனற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

இதனூடாக இனங்களுக்கு இடையில் மேலும் பிரிவினை ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் உள்ள மதஸ்தலம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு நாட்டிலிருந்து வௌியேற தடை

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அந்த நாட்டை விட்டு வௌியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

விடுமுயை கழிப்பதற்காக முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி வௌிநாடு செல்ல இருந்த நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து மகாதிர் முகமது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

ஹெரோய்ன் வைத்திருந்த ஒருவர் கைது

ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் தலங்கம, ரொபட் குணவர்தன மாவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 20 கிராமும் 200 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இம்மாதம் 14ம் திகதி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தை மேலும் பலப்படுத்துவதாக அந்த சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய கூறினார்.

இதேவேளை தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

உடனடியாக 23 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 23 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலின் படி இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

சேவையின் அவசியம் கருதி இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுல் 06 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 06 பிரதம பொலிஸ் பரிசோதகர்களும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் 09 பொலிஸ் பரிசோதகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டவர்களுள் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − six =

*