;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (12.05.2018)

0

ஜனாதிபதி ஈரான் சென்றார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈரான் புறப்பட்டு சென்றுள்ளார்.

சற்றுமுன்னர் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

2005 முதல் 2015ம் ஆண்டு வரை நாட்டிலிருந்த பணம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது

நாட்டில் கையிருப்பில் இருந்த பணமும் மற்றும் கடனாக பெற்றுக் கொண்ட பணமும் கடந்த 2005 முதல் 2015ம் ஆண்டு வரையான காலத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார்.

மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட நீதிமன்றம் அமைக்கும் திட்டம் குறித்து கடந்த சில காலங்களாக பேசப்பட்டு வந்ததாக அவர் கூறியுள்ளார்.

இதனூடாக இடம்பெறுவது அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும் இந்த மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்த பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதே என்றும் அவர் கூறினார்.

யார் விரும்பாவிட்டாலும் அரசாங்கம் என்ற ரீதியில் தாம் சரியான விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அசை்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார்.

றத்மலானை ஆடை களஞ்சியசாலை ஒன்றில் தீ

றத்மலானை பொருபான பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு கூறியுள்ளது.

தெஹிவளை மற்றும் மொரட்டுவ தீயணைப்பு பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

‘மீனவர்களுக்கான மண்ணெண்ணை மானியம் தொடர்ந்தும் வழங்கப்படும்’

மீனவர்களுக்கு வழக்கப்பட்டு வரும் மண்ணெண்ணை மானியம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்” என, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணை விலை அதிகரிப்புத் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 1 =

*