;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (13.05.2018)

0

இரண்டாவது வர்த்தக வலயம் தென்மாகாணத்தில்..!!

தென் மாகாணத்தில் இரண்டாவது வர்த்தக வலயத்தை அமைக்கும் பணிகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி, ஹபராதுவ புதிய செயலாளர் அலுவலக கட்டடத்தொகுதி நேற்று (12) காலை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது வெலிகம பிரதேசத்தில் இது அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

வாகனம் ஒன்று மோதியதில் பெண்ணொருவர் பலி

ஹுங்கம, கிவுல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் நடந்து சென்ற பெண்ணை வாகனம் ஒன்று மோதிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அம்பலந்தொட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹுங்கம பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தப்பிச்சென்ற வாகனத்தையும் ஓட்டுனரையும் தேடி ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரங்க விவாதத்துக்கு ஒன்றிணைந்த எதிரணி அழைப்பு

சட்டவிரோதமாக சிங்கப்பூருடன் செய்துக்கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில், சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளர், சாந்தனி விஜயவர்தன தொழிற் சங்கங்களுடன் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி அழைப்பு விடுத்துள்ளது.
மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டாலும், மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துக் காணப்பட்டாலும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதில்லை என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மின் பாவனையாளர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் மக்களுக்கு எப்பொழுதும் அதிகபட்ச சலுகைகளை வழங்குவதற்கே எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் 20 பேருக்கு அபராதம்

அண்மையில் நிறைவடைந்த சிவனொளிப்பாத மலை பருவக்கால யாத்திரையின் போது, நுகர்வுக்குப் பயனற்ற பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நல்லத்தண்ணி – சிவனொளிப்பாத மலை முதல் மஸ்கெலியா – நிசங்க உயன வரையானப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 32 சுற்றிவளைப்புக்களின் போதே, இந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மஸ்கெலிய பொது சுகாதார பரிசோதகர் அமில சோமதாஸ தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + nineteen =

*