;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (14.05.2018)

0

கல்வி வேலைத்திட்டத்திற்காக தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற முடிவு..!!

13 வருட உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரச நிறுவனங்களைப் போன்று அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்காக முன்வந்த நிறுவனங்களுக்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

13 வருட உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அரச மற்றும் தனியார் நிறுனங்களில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 26 தொழில் கற்கை நெறிகள், பாடசாலை கற்றை நெறிகளில் சேர்க்கப்படவுள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மற்றும் சித்தி பெறத் தவறிய மாணவர்கள், இந்தத் தொழில் கற்கை நெறியின் கீழ் கல்வியை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதன் முதற்கட்டத்தின் கீழ் 42 பாடசாலைகளை சேர்ந்த இரண்டாயிரத்து 400 மாணவர்கள் தற்போது கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முத்திரை கண்காட்சி 25 ஆம் திகதி முதல்

தபால் திணைக்களத்தின் முத்திரை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு முத்திரை கண்காட்சி எதிர்வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கண்காட்சி மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் கொழும்பு 10, டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் உள்ள தபால் தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

பழமையான முத்திரைகள், சில்லரை காசு, நாணயத்தாள் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு முத்திரைகளை கொள்வனவு செய்யவும், முத்திரை, அதற்கான அல்பம் மற்றும இன்னும் முத்திரைகள் தொடர்பான பல்வேறு விடயங்களை கொள்வனவு செய்யவும் முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டண விலை தொடர்பில் நாளை அமைச்சரவையில் தீர்மானம்

எரிபொருள் விலை அதிகரித்துள்ளதை முன்னிட்டு, பஸ் கட்டண அதிகரிப்பு தொகை பற்றிய தீர்மானம், நாளைய தினம் (15) அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சபையின் தலைவர் எம்.ஏ.பீ.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பஸ் கட்டண விலை தொடர்பில் இன்றைய தினமும் (14) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையால், பஸ் கட்டணத்தை நூற்றுக்கு 20 சதவீதத்தால் அதிகரிக்க ​வேண்டும், எனவும் அவ்வாறு தமது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்வுள்ளதாகவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

‘அரசாங்கம் தோற்றுவிட்டது’

இன, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், நேற்று (13) தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ள போதிலும், சட்டத்தின் ஆட்சியை நிலைப்படுத்துவதில், அரசாங்கத்துக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதிலும், கடும்போக்குக் குழுக்களை நிறுத்துவதிலும் அரசாங்கத்தின் தோல்வி, அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளில் வெளிப்பட்டிருந்தது. நாடகங்கள் மூலமாகவும் ஏனைய விடயங்கள் மூலமாகவும், நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியாது. நடைமுறைச் சாத்தியமான ஏதாவதொன்று செய்யப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களை, பல்வேறு பதவிகளில் அமர்த்துவது சிறந்த வழியாக அமையுமென அவர் தெரிவித்தார். அண்மையில் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் தொடர்பான விடயத்தைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு மாகாணத்துக்கேனும், முஸ்லிம் ஆளுநரொருவர் நியமிக்கப்படவில்லை என, தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + sixteen =

*