;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (14.05.2018)

0

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம்

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஜெனரல் பிபின் ரவாட் 7 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு இராணுவத்தளபதி லுதினன் ஜெனரல் சேனநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்திய இராணுவத்தின் உயரதிகாரி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

நேற்று (13) மாலை இலங்கை வந்த அவருக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

ஜெனரல் பிபின் ரவாட் மற்றும் அவருடன் வருகை தந்துள்ள குழுவினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

அம்பன்பொல, ரொலவ பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தான் வசிக்கும் வீட்டில் இருந்து புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டிற்கு மின்சாரத்தை எடுக்க முற்பட்ட வேளையிலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த நபரை அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருவளை தொடக்கம் மன்னார் வரையான மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருக்கான மானியம் வழங்கப்படுதாக அரசு தெரிவித்திருந்த போதும் அது பயனற்ற ஒரு விடயம் எனவும் இவ்வாறு ஒரே முறையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் மீனவர்கள் பெரும் கஷ்டங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலுக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்ற காரணத்தால் சிலாபம் நகரின் பல பகுதிகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் சிலாபம் மீன் விற்பனை நிலையமும் மூடப்பட்டுள்ளதாகவும், படகுகள் கடலுக்கு செல்லாமல் தரித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + sixteen =

*