;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (15.05.2018)

0

ஈரானிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஈரான் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் கடார் விமான சேவைக்கு சொந்தமான Q.R.-668 என்ற விமானத்தில் ஜனாதிபதி நாடு திரும்பியதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

ஈரானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அந்தநாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி உட்பட அந்நாட்டின் உயர் அதிகாரிகள் பலருடன் சந்திப்பை மேற்கொண்டிருந்ததுடன், 05 உட்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டிருந்தார்.

பஸ் கட்டண அதிகரிப்பு சம்பந்தமான அமைச்சரவை பத்திரம் இன்று தாக்கல்

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது குறித்த அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது சம்பந்தமாக தீர்மானம் எடுப்பதற்கு நிபுணத்துவ குழுவினர் நேற்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பஸ் கட்டணத்தை அதிகரிப்பது சம்பந்தமாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது சம்பந்தமாக அமைச்சரவை பத்திரத்தை தயார் செய்து அதனை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்க அந்த நிபுணத்துவ குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதுடன், அமைச்சரவை அனுமதி கிடைத்த பின்னர் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.

10% வீத கட்டண அதிகாரிப்பை எதிர்பார்ப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பால் சபையில் பதற்றம்

போப்பே – போத்தல பிரதேச சபையின் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

இன்றைய சபை அமர்வில் எரிபொருள் விலை அதிகரிப்பு சம்பந்தமாக இடம்பெற்ற சூடான விவாதத்தையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே சபை நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளன.

சய்டம் மாணவர்களை கொத்தலாவெல கல்லூரியில் இணைப்பதற்கு அனுமதி

சய்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சய்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பது சம்பந்தமான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர் கல்வியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ ஆகியோர் இணைந்து தாக்கல் செய்தனர்.

அந்த மாணவர்களின் தகுதியை மதிப்பீடு செய்து அவர்களின் தகுதிக்கமைய கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொள்வதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கு அனுமதி கிடைத்ததாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*