15 May 2018 0 Comments Report

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (15.05.2018)

நாளை முதல் பஸ் உரிமையாளர்கள் பணி நிறுத்தம்

நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அனைத்து மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் 6.56% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டண தொகையில் அதிகரிப்பு செய்யாதிருப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அனைத்து மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.

இதே கோரிக்கையை முன்னிறுத்தியே அவர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

400 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 400 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு நாளை (16) பத்தரமுல்ல, சுகுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெற உள்ளது.

உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க கூறினார்.

கடந்த 03 ஆண்டுகளில் வௌிநாடுகளில் உள்ள சுமார் 32,000 இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் கூறினார்.

நாளை முதல் பஸ் உரிமையாளர்கள் பணி நிறுத்தம்

நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அனைத்து மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் 6.56% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டண தொகையில் அதிகரிப்பு செய்யாதிருப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அனைத்து மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.

இதே கோரிக்கையை முன்னிறுத்தியே அவர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்

அமைச்சரவை கூட்டம் இன்று (15) காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 10 மணியளவில் இந்த கூட்டம் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.


Post a Comment

*