;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (16.05.2018)

0

நாடு முழுவதும் பத்து இலட்சம் ஆஸ்துமா நோயாளர்கள்

நாட்டில் பத்து லட்சம் ஆஸ்துமா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கீர்த்தி குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆஸ்துமா நோயினால் வருடந்தம் ஆயிரம் நோயாளர்கள் மரணிக்கிறார்கள்.

பாடசாலை செல்லும் 25 சதவீதமானோருக்கு ஆஸ்துமாவுக்கான நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன.

ஆஸ்துமா நோய்க்கான சிகிச்சையை அரசாங்க வைத்தியசாலைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் டொக்டர் கீர்த்தி குணசேகர குறிப்பிட்டார்.

12 மணிநேர தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட திலும் அமுனுகம

பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவை 12 மணிநேர தொடர் விசாரணைகளின் பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்கு அவர் அங்கு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச மரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் கைது

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 மில்லியன் பண மோசடி தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையிலேயே நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்குப் முன்னர் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டு பின்னர் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற கலைஞர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 5,000 ரூபாயாக அதிகரிப்பு

தேசிய சினிமாத்துறையை போஷிப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்து செயற்பட்ட ஓய்வுபெற்ற கலைஞர்களை பாராட்டும் முகமாக அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு திட்டத்தின் உத்தியோகபூர்வ, ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சினிமா மண்டபத்தில் இடம்பெற்றது.

1987ஆம் ஆண்டில் 500 ரூபாயாக ஆரம்பிக்கப்பட்ட இந்த கொடுப்பனவு பிற்காலத்தில் 2000 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டு 57 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டதுடன், 1998ஆம் ஆண்டின் பின்னர் அக்கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை.

2000 ரூபாயாக காணப்பட்ட இந்த கொடுப்பனவு 20 வருடங்களுக்கு பின்னர் ஜனாதிபதியின், ஆலோசனைப்படி கடந்த வரவு செலவு திட்டத்தில் 5000 ரூபாவாக உயர்த்தப்பட்டது.

அதற்கேற்ப இந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் 163 கலைஞர்களுக்கு 5000 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதுடன், 2018 மார்ச் 31ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பப்படிவங்களுக்கமைய 60 வயதிற்கு மேற்பட்ட, விண்ணப்பங்களை சமர்ப்பித்த சகல கலைஞர்களும் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான கொடுப்பனவை இரண்டாம் கட்டத்தின் கீழ் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

கொடுப்பனவுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் 20 கலைஞர்களுக்கு உரிய காசோலைகளை இதன்போது ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 14 =

*