;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (17.05.2018)

0

கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று

கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று (17) காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் பாராளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது.

பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த காரணத்தால் செயலிழந்த செயற்குழுவை மீண்டும் நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இதில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.

அரச வைத்தியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 08.00 மணி முதல் பரந்தளவிலான அடையாள வேலைநிறுத்த போராட்டத்ததை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

தமது கோரிக்கைக்கு அரசாங்கம் சிறந்த தீர்வொன்றை வழங்காவிட்டால் எதிரில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (17) இடம்பெற உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய அந்தக் கட்சியின் 16 உறுப்பினர்களும் கட்சியின் வளர்ச்சிக்காக சில ​யோசனைகளை முன்வைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

அதேநேரம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என்று இதற்கு முன்னர் மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்வைத்த யோசனை சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்பட உள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

வான்கதவுகள் திறக்கப்பட்டன

தொடரும் மழையுடனான வானிலைக் காரணமாக உடவல மற்றும் கலாவேவ வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி கலாவேவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும், உடவல நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் வசிக்கும் தாழ்நிலப் பி​ரதேச மக்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 1 =

*