;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (17.05.2018)

0

தியத்தலாவ விமானப் படை முகாமில் வெடிப்புச் சம்பவம்; மூவர் காயம்

தியத்தலாவயில் உள்ள விமானப் படை பயிற்சி முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைக்குண்டு ஒன்று இன்று காலை 10.15 மணியளவில் வெடித்ததாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன கூறினார்.

விமானப் படையில் பணியாற்றும் பெண் ஒருவரும் இரண்டு வீரர்களும் காயமடைந்திருப்பதாக அவர் அத தெரணவிடம் கூறினார்.

காயமடைந்த மூவரும் தற்போது தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள விஷேட அறிவித்தல்

வௌிநாடுகளுக்கு பயணிக்க இருப்பவர்கள் பயண நேரத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என்று ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று (17) மதியம் 12.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரும் வரையில் இவ்வாறு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தருமாறு கூறப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் இந்த விடயத்தை கூறியுள்ளது.

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் நேரத்திற்கு பணியாற்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ETI நிறுவனத்திற்கு முன்னால் போராட்டம்; வோர்ட் பிளேஸ் வீதியில் போக்குவரத்து தடை

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதியின் பொரள்ளை நோக்கிய பகுதி போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

அப்பிரதேசத்தில் ETI நிறுவனத்தில் பண வைப்புச் செய்தவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதி முடப்பட்டுள்ளது.

ஈ.டி.ஐ. பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பண வைப்புச் செய்தவர்கள் தமது வைப்புப் பணத்தை மீள வழங்குமாறு கோரி அந்த நிறுவனத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஜூன் மாதம் 12ம் திகதி வரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் கெரம் போர்ட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போது மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இந்த சம்பவத்தில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடுவதற்கு முன்னாள் சதொச தலைவர் நலின் பெர்ணான்டோவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது.

அதன்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கால அவகாசம் கோரியதையடுத்து நீதிமன்றம் ஜூன் மாதம் 12ம் திகதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தெதுறு ஓயா நீர்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு

தெதுறு ஓயா நீர்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆறு வான் கதவுகளும் ஒவ்வொறு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தாழ் நிலப் பகுதியிலுள்ளோர் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் விஷேடமாக சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் பல்லம ஆகிய பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்க ஆபத்து நிலவுவதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய்

இலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் கூறியுள்ளது.

கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கட் மேலும் கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 7 =

*