;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (17.05.2018)

0

குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டம்

புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்னிறுத்தி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்களின் சங்கம் நேரத்திற்கு மாத்திரம் வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக விமான நிலையத்தின் முன்னால் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை அவர்கள் மேற்கொண்டிருந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்றிரவு 100 மில்லிமீற்றர் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (17) இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யலாம் என்று தெரிவிகப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிகரித்து வரும் மழையுடன் கூடிய காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தயாராகியுள்ளது.

இதனடிப்படையில் இன்று முதல் 2 வாரங்களுக்கு இதுதொடர்பான ஒத்திகை மேற்கொள்ளப்படவிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கியதில் முன்னாள் இராணுவ வீரர் பலி
திருகோணமலை, கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வயல்வெளியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

56 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் சு.ஆ.அபேரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தனது 50 ஆவது வயதில் இராணுவ சேவையில் இருந்து விலகி பின்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறையில்

காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறை மாவட்ட செயலக அலுவலகத்தில் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெற உள்ளது.

அன்றைய தினம் காலை 09.30 மணிக்கு காணாமல் போனோர் அலுவலகத்தின் அலுவலர்கள் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திக்க உள்ளனர்.

அதேவேளை காலை 11.30 மணிக்கு சிவில் சமூக அமைப்புக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் கூறியுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அதன் முதல் சந்திப்பு கடந்த 12ம் திகதி மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்றது.

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வு

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகி இதுவரை அந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு, அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார்.

பிரதமர் தலைமையில் இன்று கூடிய, பொருளாதாரத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்களுடனான சந்திப்பின்போது அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகி தீர்வுகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு குறுகிய காலத்தில் தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் ராஜிதவுக்கு விசேட விருது

தாதியர் சேவையின் தரத்தை உயர்த்துவதற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்தமை காரணமாக சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச தாதியர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில், ​அரச தாதியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் இன்று (17) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், தாதியர் சேவையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*