;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (18.05.2018)

0

அரச வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தம் 08 மணிக்கு நிறைவடைகிறது

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று ஆரம்பித்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று காலையுடன் நிறைவடையவுள்ளது.

நேற்று காலை 08.00 மணி முதல் ஆரம்பித்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை 08.00 மணியுடன் நிறைவடைய உள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது கோரிக்கைக்கு அரசாங்கம் சிறந்த தீர்வொன்றை வழங்காவிட்டால் எதிரில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

பெண் அதிபர் உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை

கொழும்பில், பிரபல்யமான பாடசாலைக்கு முதலாம் தரத்துக்கு, இவ்வருடம் மாணவர்களை சேர்த்துகொள்ளும் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைபாடுகள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைக​ள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட, நேர்முகம் கண்ட குழுவைச் சேர்ந்த ஐவர் மற்றும் கல்விசார ஊழியர் உள்ளிட்டோருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி

பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவின், (கோப் குழுவின்) தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியை மீண்டும் நியமிக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று (17) கட்சித்தலைவர்கள் ஒன்றுக்கூடிய போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

முழுக்கம்பத்தில் பேரவைச் செயலக கொடி

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, வடமாகாண பாடசாலைகளில் மாகாண சபை கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், இன்று (18) மாகாண பேரவைச் செயலக கொடி முழுக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 1 =

*