;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (19.05.2018)

0

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகும் ஶ்ரீலசுக

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான தினத்தை குறித்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (17) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தாக முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் போராட்டம் நிறைவுக்கு வந்தது

கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள், நேற்று நள்ளிரவு முதல் மேற்கொண்டுவரும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை, சற்று முன்னர், நிறைவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன வழங்கிய எழுத்துமூலமான உறுதிமொழியைத் தொடர்ந்து, தொழிற்சங்க நடவடி்ககை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேற்படி அதிகாரிகள், மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று நள்ளிரவு முதல் , சட்டப்படி வேலைப் போராட்டத்தை முன்னெடுத்துவந்தனர்.

இதன்காரணமாக, விமான நிலையத்தில், அடிக்கடி நீண்டிவரிசையில் மக்கள் காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இருப்பினும், விமான நிலையத்தின் அன்றாடப் பணிகளுக்கு எவ்விதத் தடங்கலும் ஏற்படவில்லையென, விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தவிர, விமான நிலையத்துக்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களைச் சந்தித்துள்ள விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவ்வூழியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார்.

குடிவரவு – குடி​யகல்வுச் சேவைக்காக, புதிய அரசமைப்பொன்றை நிறுவுதல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்​வைத்தே, இந்தச் சட்டப்படி வேலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது விடயமாக, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், எந்தவொரு முடிவும் எட்டப்படாத நிலையில், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறினர்.

இந்தப் போராட்டம் காரணமாக, விமான நிலையப் பணிகள் மாத்திரமன்றி, நாட்டிலுள்ள அனைத்துத் துறைமுகங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவுடன் 16 பேரும் பேச்சு

அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (20), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, 16 பேரில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்ருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அதன் பின்னர், தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணாயக்கார போன்ற, நாடாளுமன்றத்தில் எதிரணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது குழுவினர், மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த யாப்பா, எதிர்வரும் 26ஆம் திகதி முதல், பல கூட்டங்களை நடத்த எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் இதன் முதலாவது கூட்டம், மாத்தறையில் நடத்தப்படவுள்ளதாகவும், குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, அதற்கான காரணிகளை, உரிய நிபுணர்களைக் கொண்டு, பொதுமக்களிடம் விளக்குவதே, தமது கூட்டங்களின் நோக்கமெனவும், லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + eleven =

*