;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (19.05.2018)

0

பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளயிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழையை எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100மி.மீ அளவான பலத்த மழையை எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால சம்பவங்களில் பாடம் படிக்க வேண்டும்

கடந்த கால சம்பவங்களில் பாடம் படித்து மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

யுத்த வெற்றியின் 09 ஆண்டு நிறைவையிட்டு விஷேட உரையின் மூலம் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சுமார் 29,000 இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளதாகவும், பயங்கரவாதிகள் திட்டமிட்டு முன்னேறிய முறையையும், எமது நாடு இரண்டாக பிளவுபட்டதையும் அனைவரும் அறிவர் என்று அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக கடந்த கால சம்பவங்கள் மூலம் பாடம் படித்து அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

முப்படையின் சிரேஷ்ட அதிகரிகளுக்கு விஷிஷ்ட சேவா விபுஷண பதக்கம்

தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்கடை ஆகிய முப்படைகளையும் சேர்ந்த 50 அதிகாரிகள் “விஷிஷ்ட சேவா விபுஷண” பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

முப்படைளையும் சேர்ந்த தற்போது சேவையில் இருக்கின்ற மற்றும் ஓய்வுபெற்ற 52 பேருக்கு இந்தப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

முதலில் இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோருக்கு இந்தப் பதக்கம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*