;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (20.05.2018)

0

மின்னல் தாக்கியதில் இருவர் பலி

பொலன்னறுவை, வெலிகந்த பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

17 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இருவரும் வயல்வெளியில் இருந்த போதே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய வானிலை நிலவும்

நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலையின் காரணமாக மேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவு, இடியுடன் கூடிய மழைப்பெய்யக்கூடும் என, வானிலை ​அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் ஒருவர் பலி

சிலாபம், வெல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்சகப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலணிய, வெல்ல பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடும் மழை காரணமாக பொல்கொல்லை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு..!

மலையகத்தின் பல பகுதிகளிலும் அடை மழை பெய்து வருவதானால் பொல்கொல்லை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக மகாவலி பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த நீர்த் தேக்கத்திற்கு ஒருவினாடிக்கு சராசரியாக 60 கன மீற்றர் நீர் சேர்வதாகவும் அதிலிருந்து 12 கன மீற்றர் நீர் விக்டோரியா நீர்தேக்கத்திற்கு அனுப்பப்படுவதாகவும் பொல்கொல்ல பொருளியியலாளர் காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.

தொடங்‍கொல்ல பிரதான வீதியில் மண்சரிவு; மூடப்பட்டது பாதை..!

கண்டி, தொடங்‍கொல்ல பிரதான வீதியிலுள்ள சுரங்கப் பாதையில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக அப்பாதையின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மலையகத்தில் பெய்து வரும் அடை மழையின் காரணமாகவே இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியூடாக பயணிக்கும் பயணிகள் பெரும் அசெளரியத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந் நிலையில் கண்டி மாநகர சபை அங்கத்தவர் விக்னேஷ்வரன் அதிகாரிகளுடன் குறித்த இடத்திற்கு சென்றதுடன் அப் பாதையை சீராக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + one =

*