;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (20.05.2018)

0

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது

காலி – மாபலகம வீதியில், ஹிக்கடுவ – கனேகொட பாலத்துக்கு அருகில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபரொருவர், நேற்றைய தினம் (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

​​​குறித்த சந்தேகநபர் காலி பிர​தேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் என்பதோடு, 101 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மூடுப்பனியின் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

நாட்டில் நிலவி வரும் மழையுடன் கூடிய வானிலையின் காரணமாக, மத்திய மலைப் பிரதேசங்களில் மூடுப்பனி காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்தப் பிரதேச வீதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்தப் பிரதேசத்தில் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்தமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

மேலும் நோர்டன் பிரிஜ் – ​ஹட்டன் பிரதான வீதிக்கருகில் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியிலும் போக்குவரத்து பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,220 சிகரெட் வைத்திருந்த கில்லாடி – பொலிஸாரிடம் மாட்டிக் கொணடார்!!

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்து 220 சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹற்றன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யபட்டுள்ளார்.

கரவெட்டி கலாசார மத்திய நிலையம் விருந்தினர்களால் திறந்து வைப்பு!!

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரகாரம், உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட கரவெட்டி கலாசார மத்திய நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, சிறுவர் இரைாஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,நாடபாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட விருந்தினர்களால் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

அதேவேளை நிகழ்வுக்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + nineteen =

*