;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (20.05.2018)

0

அதிவேக பாதையில் பயணிப்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

அதிவேக பாதையில் பயணம் செய்யும் வாகனங்கள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேவேளை ஒவ்வொரு வாகனங்களினதும் பிரதான மின் விளக்கை ஔிரச்செய்து கொண்டு பயணிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம்

தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, குருநாகல், பதுளை போன்ற மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தபால் தொழிற்சங்கம் அடையாள வேலைநிறுத்தம்

இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் நடத்தத் தீர்மானித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம், அமைச்சர் சரத் அமுனுகமவின் வாக்குறுதியை அடுத்துக் கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்தச் சந்தர்ப்பத்தில், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என, அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜூன் 3, 4ஆம் திகதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக, அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.

’காணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமானது’

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், எவ்வித அரசியல் தொடர்பும் கொண்டதல்ல எனத் தெரிவித்த, அலுவலகத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ், இது சுயாதீனமானதோர் அலுவலகம் எனவும் குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் இரண்டாவது மக்கள் சந்திப்பு, மாத்தறை நேற்றைய நடைபெற்றது.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில் கருத்துத் வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இந்த வருடத்துக்குள், பிரதேச மட்டத்திலான இரண்டு கிளை அலுவலகங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்த அவர், மாத்தறை மாவட்டத்துக்கான, பிரதான அலுவலகம் மாத்தறையில் நகரத்தில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

1971ஆம் ஆண்டு முதல், காணாமல் போனவர்கள் குறித்த சரியான தகவல்களும் அவர்கள் கடத்தப்பட்ட இடங்கள் தொடர்பாக தகவல்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதெனத் தெரிவித்த அவர், இதனால் இவர்களது குடும்பங்கள் இது தொடர்பான தகவல்களை வழங்க வேண்டுமெனவும் இதன்போது கேட்டுக் கொண்டார்.

காணாமல் ஆக்கப்பட்டதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதல்ல எனவும், இதேபோன்று இந்த குடும்பங்களில் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும் எனவும், அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 2 =

*