;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (20.05.2018)

0

மின்னல் தாக்கி பௌத்த பெண் துறவி பலி!

மின்னல் தாக்கியதில் பௌத்த பெண் துறவியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் ஹொரணை, ஹெகலவத்தையில் உள்ள தியான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 62 வயதுடைய பெண் பௌத்த துறவியென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை வயலில் வேலை செய்துகொண்டிருந்த இருவர் குருநாகல் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

”இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்”

கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை நாம் வெற்றி கொண்டபோதும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பிரிவினை காரணமாகவே நாட்டின் அபிவிருத்தி இன்னும் மந்த கதியில் உள்ளது.

ஆகவே இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரம் நாடு அபிவிருத்தியடையும் என நீர்வளங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் கடந்த 30 வருடமாக இடம்பெற்ற யுத்தத்தில் நாம் வெற்றி கண்டுள்ளோம். எமது காலதத்தில் ஆரம்பித்த யுத்தம் எமது காலத்திலேயே நிறைவடைந்தமை மகிழ்ச்சியான ஒரு விடயமாகும். இதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

நாம் இனம், மதம் போன்ற பேதங்கள‍ை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவதனூடாகவே நாட்டை விரைவாக அபிவிருத்திக்கு ஈட்டுச் செல்லலாம் என்றார்.

சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

அதிவேகப் பாதையில் பயணிக்கும் சாரதிகள் தமது வாகனங்களை மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், ஒவ்வொரு வாகனங்களினதும் பிரதான மின் விளக்கை ஒளிரச்செய்தவாறு பயணிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக அதிவேகப் பாதையில் ஏற்படும் விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றதனை தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றது.

இதனால் தாழ் நிலப் பகுதியிலுள்ளோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − seven =

*