;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (21.05.2018)

0

மண்சரிவு காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு..!!

ஒஹிய மற்றும் இதல்கச்சின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதனால் பதுள்ளை வரையான மலையக புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை..!!

சீரற்ற காலநிலை காரணமாக இரத்னபுரி, தெஹியோவிட்ட மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிக்கின்றார்.

அதனடிப்படையில் குறித்த பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்டடம் தாழிறங்கும் அபாயம்..!!

கொழும்பு-07, சுதந்திர சதுக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்டடத்தின் ஒரு பகுதி, தாழிறங்கும் அபாயத்தில் உள்ளதென கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தக் கட்டடம், இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் அடித்தள பகுதியே இவ்வாறு தாழிறங்கும் அபாயத்தில் உள்ளதெனவும் அந்தப் பகுதியில் பல பிளவுகள், வெடிப்புகள் ஏற்பட்டுள்ளனவெனவும் அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டுக்கு, 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர், அதனை நினைவு கூர்ந்து, சுதந்திரக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளத்தை, அன்றைய பிரதமர் டீ.எஸ்.சேனாநாயக்க, 1949 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று மேற்கொண்டிருந்தார். அந்தக் கட்டடம், 1953 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டது.

10 ஆயிரம் அடி விசாலமான இந்த கட்டடத்தின் கீழ், கீழ்மாடி ஒன்றும் உள்ளது. அதில், 108 தரைகீழ் அறைகளும் உள்ளன. இந்தக் கட்டடம் தாழிறங்குவது தொடர்பில், ஆராய்ந்து அறிக்கையிடுமாறு, விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 11 =

*