;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (21.05.2018)

0

வௌ்ளத்தில் சிக்கிய 15 பேர் மீட்பு..!!

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட, மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரை, இராணுவத்தினர் இன்று(21) காலை காப்பாற்றியுள்ளனர்.

“பள்ளம் ரதஓயா, பெருக்கெடுத்தமையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்குண்டவர்களே இவ்வாறு காப்பற்றப்பட்டனர்” என்று புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.என்.கே. அலஹகோன் தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாகவே, இந்த ஓயா பெருக்கெடுத்தது என்று தெரிவித்த அவர், நேற்றிரவு சிக்கிய அந்த 15 பேரையும் கடற்படையினர், இன்றுகாலை மீட்டனர். அவர்கள் அனைவரும், பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

களுத்துறைக்கு சிவப்பு எச்சரிக்கை..!!

களுத்துறை மாவட்டத்தில், பாலிந்தநுவர பிரதேத்தில், பாரிய மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவுறுத்தியுள்ள, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம், அப்பிரதேசத்துக்கு “சிவப்பு எச்சரிக்கை” விடுத்துள்ளது.

மின்னல் தாக்கியதில் மீனவர் மரணம்..!!

தப்போவ குளத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர், மின்னல் தாக்கத்துக்குள் இலக்காகி உயிரிழந்துள்ளாரென, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு ஏற்பட்ட இவ்வனர்த்தத்தில், தப்போவ- பள்ளிய என்னுமிடத்துக்கு அண்மையில் வசித்துவந்த கீத் சத்துரங்க (வயது 34) என்பவதே உயிரிழந்துள்ளார்.

அவருடைய சடலம், தப்போவ பிரதேச வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரியின் 7 பிரதேசங்களில் மணிசரிவு அபாயம்..!!

இரத்தினபுரி மாவட்டத்தின், அயகம, நிவித்திகல, கொலன்ன, கலவான, கிரிஎல்ல, பெல்மடு​ளை மற்றும் கஹாவத்தை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அதணை அண்டியுள்ள பகுதிகளில், மண்சரிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக, கட்டட மற்றும் ஆராய்ச்சி நிறுவகம், இன்று (21) எச்சரிக்கை விடுத்துள்ளது.

​இன்று காலை 5 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, 24 மணித்தியாலத்துக்கு நீடிக்குமெனவும், அந்நிறுவகம் அறிவித்துள்ளது.

இந்தப் பிரதேசங்களுக்கு, 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெற்றுமென்றும் அவ்வாறு பெய்யும் பட்சத்தில், மண்சரிவு ஏற்படக்கூடுமென்றும், அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 10 =

*