;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (21.05.2018)

0

சீரற்ற காலநிலை – 1024 பேர் இடம்பெயர்வு, 13,314 பேர் பாதிப்பு..!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 1024 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 13,314 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 5 பேர் சீரற்ற காலநிலையால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வௌியேறி தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, சில மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இரத்தினபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும், தெதுரு ஓய மற்றும் உடவல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை அடுத்து வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை..!!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக முப்படையினர் தயார் நிலையில்..!!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் விஷேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் இலங்கை கடற்படையினரால் 27 குழுக்கள் தற்போது காலி, களுத்துறை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு அனுப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் டிங்கி படகு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேனை இலங்கை இராணுவத்தினரின் 115 பேர் 4 மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 25 பேர் கொண்ட குழு ஒன்று காலி மாவட்டத்திற்கும், 30 பேர் கொண்ட குழு ஒன்று இரத்தினபுரி மாவட்டத்திற்கும், 40 பேர் கொண்ட குழு ஒன்று களுத்துறை மாவட்டத்திற்கும் மற்றும் 20 பேர் குழு ஒன்று மாத்தறை மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விமானப்படையினர் மற்றும் விமானங்கள் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக தயார் நிலையில் இருப்பதாகவும் விமானப்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனையில் 10 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்..!!

அக்கரப்பத்தனை- நியு​போட்மோர் தோட்டத்தின் எல்டோரி பிரிவிலுள்ள இரண்டு வீடுகள் மீது மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் குறித்த வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதில் இடிந்து வீழ்ந்ததில் குறித்த இரு வீடுகளுக்கும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இரு வீடுகளில் வசித்தவர்கள் தோட்ட வாசிகசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அக்கரப்பத்தனை பிரதேசத்தில் நேற்று (20) காலை தொடக்கம் இன்று பகல் வரை அடைமழைத் தொடர்வதால், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தமது அன்றாட கடமைகளை முன்னெடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் ஆணமடுவவில் அதிகூடிய மழை வீழ்ச்சி..!!

கடந்த 24 மணித்தியாலத்தில் ஆணமடுவ பகுதியில் அதிகப்படியாக 353.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் இன்று திங்கட்கிழமை காலை 8.30 வரையான காலப் பகுதியிலேயே குறித்த மழை வீழ்ச்சி பதவிவாகியுள்ளது.

மேலும் ஆதிகமவில் 339 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் தமன்கடுவவில் 316 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் மாத்தளையில் 267.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் இரத்தினபுரியில் 232.6 மில்லி மீற்றர் மழை வீச்சியும் குளியாப்பிட்டியவில் 232 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் குக்குளே கங்கவில் 227 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதவிகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*