;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (21.05.2018)

0

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நால்வர் போட்டி..!!

இம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக இதுவரை நான்கு பேர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி முன்னாள் தலைவர்களான திலங்க சுமத்திபால, ஜயந்த தர்மதாச, முன்னாள் செயலாளரும் தற்போதைய உபதலைவருமான மொஹன் டி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இவர்கள் நால்வருடைய பெயர்களையும் கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் நாளைய தினத்திற்குள் முன்வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் காய்ச்சல் காரணமாக தென் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை..!!

மாத்தறை, முலடியான, அகுரெஸ்ஸ, தங்காலை, வலஸ்முல்ல மற்றும் காலி மாவட்ட கல்வி வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையான வகுப்புகளை தற்காலிகமாக மூடுவதற்கு தென் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பரவிவரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தென் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாளையும் (22), நாளை மறுதினமும் (23) ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையான வகுப்புகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தென் மாகாணத்தில் உள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கும் தென் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொல்கொல்ல நீர்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறப்பு..!!

அதிகளவான மழைவீழ்ச்சியின் காரணமாக பொல்கொல்ல நீர்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

நிமிடத்திற்கு 23,000 கன அளவான நீர் இதன் மூலம் வெளியேற்றப்படுவதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வெளியேற்றப்படும் விக்டோரிய நீர்தேக்கத்திற்கு அனுப்பப்படுவதாகவும் மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் விக்டோரிய நீர்தேக்கத்தை அண்டிய பகுதியில் இருப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்குவது தொடர்பில் பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்..!!

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (21) நடைபெற்றது.

இதன்போது சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய தரப்பினருடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறும், மேலும் முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − two =

*