;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (22.05.2018)

0

புத்தளம் வரையான புகையிரதம் லுனுவில புகையிரத நிலையத்துடன் மட்டுப்படுத்தப்பட்டது

கொழும்பில் இருந்து புத்தளம் வரையான புகையிரத பாதையின் பயணத்தை லுனுவில புகையிரத நிலையத்துடன் மட்டுப்படுத்தியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

நாத்தாண்டிய மற்றும் தும்மோதர புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் ​ஹெமில்டன் ஆறு பெருக்ககெடுத்துள்ளதால் புகையிரத பாதை நீரினால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனாலேயே கொழும்பில் – புத்தளம் வரையான புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 1486 குடும்பங்களை சேர்ந்த 5862 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் பெரிய நீர்நிலைகள் நிரம்பி வழிவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

புதிய பஸ் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு

புதிய பஸ் கட்டண திருத்தம் இன்று (22) அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து நூற்றுக்கு 6.56 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் அந்தக் கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொள்ளாத தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.

இதன் காரணடாக 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு இணக்கம் தெரிவித்திருந்தது. அதேநேரம் குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி குறித்த கட்டண திருத்தத்தை இன்று அமைச்சரவைக்கு சமர்பித்து அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.

விஷேட விவாதத்தை கேட்டுள்ள கூட்டு எதிர்கட்சி

நாட்டில் தற்போது நிலவுகின்ற அனர்த்த நிலமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விஷேட விவாதத்தை நடத்துமாறு கூட்டு எதிர்கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்ததாக கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

இன்று மதியம் பாராளுமன்ற ஆரம்பித்தின் போது இந்த விவாதத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதுகுறித்து பேசுவதற்கு இன்று மதியம் கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 7 =

*