;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (22.05.2018)

0

விஷேட விவாதத்தை கேட்டுள்ள கூட்டு எதிர்கட்சி..!!

நாட்டில் தற்போது நிலவுகின்ற அனர்த்த நிலமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விஷேட விவாதத்தை நடத்துமாறு கூட்டு எதிர்கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்ததாக கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

இன்று மதியம் பாராளுமன்ற ஆரம்பித்தின் போது இந்த விவாதத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதுகுறித்து பேசுவதற்கு இன்று மதியம் கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்

தென் மாகாணத்திற்கு விஷேட வைத்தியர்கள் குழு

தென் மாகாணத்தில் பல பகுதிகளில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் நோயாளர்களை கண்காணிப்பு செய்வதற்காக நேற்றைய தினம் விஷேட வைத்தியர்கள் குழுவொன்று அந்தப் பிரதேசங்களுக்கு சென்றுள்ளது.

முன்னதாக தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அனில் திசாநாயக்கவின் தலைமையில் அங்கு சென்ற விஷேட வைத்தியர்கள் குழுவினர் இந்த வைரஸ் தொற்று சம்பந்தமாக பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் பல பகுதிகளில் தற்போது பரவிவரும் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று சம்பந்தமாக தேடிப்பார்ப்பதற்கு தொற்று நோய்ப் பிரிவின் விஷேட வைத்தியர்கள் குழுவொன்றை தென் மாகாணத்துக்கு அனுப்புமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜயசிங்கவிற்கு வழங்கப்பட்ட ஆலோசனைப்படி இந்தக் குழுக்கள் அங்கு சென்றுள்ளது.

இதேவேளை வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் சுகாதார அமைச்சில் விஷேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது தென் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை; மூவர் சிக்கினர்

பெலிஅத்த, வலஸ்முல்ல வீதியில் இருக்கின்ற எரிபொருள நிரப்பு நிலையம் ஒன்றை உடைத்து 650,000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காளை பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரால் பெலிஅத்த கம்புஸ்ஸாவல பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது கொள்ளையிட்ட பணத்தில் இருந்து 25,150 ரூபாவும் 35,000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் 18 மற்றும் 19 வயதுடைய பெலிஅத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று தங்காளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி; குறைந்தபட்ச கட்டணம் 12 ரூபா

நூற்றுக்கு 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.

அதேநேரம் குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த கட்டண அதிகரிப்பு இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வர உள்ளதாக அவர் கூறினார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து நூற்றுக்கு 6.56 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் அந்தக் கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொள்ளாத தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததுடன், 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும் குறைந்தபட்ச கட்டணத்தை 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் கோரியிருந்தனர்.

அதன்படி குறித்த கட்டண திருத்த யோசனை இன்று அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + fifteen =

*