;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (22.05.2018)

0

கேகாலையில் 3 கல்வி வலயங்களுக்கு விடுமுறை

சப்ரகமுவ மாகாணத்தில், கேகாலை மாவட்டத்திலுள்ள மூன்று கல்வி வலயங்களுக்கு இன்று(22) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, நிவித்திகல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைக்கும் கல்வியமைச்சினால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரூ. 20 மில்லியன் இலஞ்சம்; இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

20 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணியாட்தொகுதிப் பிரதானி கலாநிதி கே. மஹாநாம, அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல், எதிர்வரும் 05 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டது.

இவ்விருவரும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

கடுவளை உள்மாற்றீடு சுற்று மூடப்பட்டது

வௌ்ளம் காரணமாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான, கடுவளை உள்மாற்றீடு சுற்று, மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளது என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

12.5 சதவீத பஸ் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி

பஸ் கட்டணங்களை 12.5 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு போக்குவரத்து அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (22) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அங்கிகாரமளிக்கப்பட்டள்ளது.

அதனடிப்படையில், ஆகக் குறைந்த கட்டணமான 10 ரூபாய், இரண்டு ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டது

​மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு தாழ்வுப் பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக நேற்று மாலை திறக்கப்பட்ட மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இன்று காலை 08 மணியளவில் மூடப்பட்டுள்ளது.

பின்னர் அந்த நீர்த் தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று காலை 10.00 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மழை மேலும் நீடித்தால் அந்த நீர்த் தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் திறக்கப்படும் என்பதால் கொத்மலை ஓயாவின் இருபக்க தாழ்வான பகுதிகளிலும் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 2 =

*