;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (22.05.2018)

0

பாதிக்கப்பட்ட மாணவர்கள் தகவல் வழங்க அவசர இலக்கம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கு விரைவாக உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் சீருடைகள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்திருப்பின் அது தொடர்பில் கல்வியமைச்சின் 1988 என்ற அவசர தொடர்பிலக்கத்துக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் தகவலுக்கு அமைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுதவிர ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட, மாணவர்களின் சீருடைகள், பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் சேதமடைந்திருப்பின் அவற்றை விநியோகிப்பதற்கு விஷேட அவதானம் செலுத்துமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இது தொடர்பில் கல்வியமைச்சின் 1988 என்ற அவசர தொடர்பிலக்கத்துக்கு தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் ஒன்று தடம்புரண்டதில் களனிவெலி ரயில் சேவையில் தாமதம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று கொட்டாவ மாலபல்ல ரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதனால் களனிவெலி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

மேலும், களனிவெலி ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அப்பகுதி ஊடாக பயணிக்கும் அனைத்து ரயில்களும் நுகேகொட வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு

2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிக அளவு இலாபம் அடைந்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த வீரர்கள் 33 பேரை தவிர டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடும் அனைத்து வீரர்களுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த வீரர்கள் A, B, C, D மற்றும் பிரீமியர் என பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − eight =

*