;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (23.05.2018)

0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும்

நாட்டின் தெற்கு – மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து ஓரளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

குறிப்பாக இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா

தீப்பெட்டிகள் உற்பத்திக்கு தேவையான மருந்துகள் இல்லாமைக் காரணமாக, நாளைத் தொடக்கம் (23) தீப்பெட்டித் தொழிற்சாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பான தீப்பெட்டிகள் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தலையிட்டு இதற்குத் தேவையான மருந்துகளை சரியான முறையில் கொண்டு வராமைக் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

தீப்பெட்டி மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டவுடன், அரசாங்கம் மருந்துப் ​பொருட்களைக் கொண்டு வந்துத் தருவதாக குறிப்பிட்டிருந்த நிலையில், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென்றும், இதனால் நாட்டில் தீப்பெட்டி பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க முடியாதென்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடுவலை – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் ஆபத்தான நிலையில்

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடுவலை – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பலம் ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அந்தப் பாலத்தின் மீதான வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் அத தெரண வினவியபோது, அந்த இடத்தை சோதனை செய்வதற்காக பொறியியலாளர்கள் குழுவொன்று தற்போது அனுப்பப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.

லொறியுடன் சிக்குண்டு ஒருவர் பலி

பமுனுகம, உஸ்வெடகொய்யாவ பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நிறுவனத்திற்கு பொருட்களை ஏற்றி வந்த லொறி ஒன்று பின்னோக்கி நகர்ந்த போது லொறியிற்கும், ​லொறியினுள் பொருட்களை ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டிருந்த கொன்கிரீடிற்கும் இடையில் நிறுவன ஊழியர் ஒருவர் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த ஊழியரை ராகமை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளார்.

வத்தளை, ஹெந்தலை பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு சீனப் பிரஜைகள் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த பெண் ஒருவர் உள்ளிட்ட இரண்டு வௌிநாட்டுப் பிரஜைகள் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறி செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீன நாட்டுப் பிரஜைகளான 48 வயதுடைய பெண் ஒருவரும் 72 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*